வடமாகாண மக்களுக்கு காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இனி அவசர உணவுகள், உரவகைகள்..!!!


வடக்கு மாகாணத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

தொலைபேசியூடாக நேற்று நடைபெற்ற, இரு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் இம் முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here