Monday 23 May 2022

அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு..!!!

SHARE


|
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ஹர்ஷன கெக்குனவல இன்று (23) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவருக்கு பதிலாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ தனது கட்சிக்காரருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அடுத்த விசாரணையில் அவர் ஆஜராகுவதாகவும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் குறித்தை வழக்கை ஜூன் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதுடன் அதுவரையில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பொது நிதியை மோசடி செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
SHARE