மதுபோதையில் கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு; வல்லையில் சம்பவம்..!!!



நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வல்லையில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி மது விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் போத்தல் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளர்.

இச்சம்பவத்தில் குணசேகரம் குணசோதி (வயது 25) நாச்சிமார் கோவிலடி திக்கம் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தில் நேற்று (02) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறி போத்தல் உடைத்து குத்தப்பட்டு உள்ளது. இதன்போது காயம் அடைந்தவரை உடனடியாக பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளர்.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here