பிரபல அமைச்சருக்கு சிகிச்சையளிக்க மறுத்துள்ள விஷேட வைத்திய நிபுணர்..!!!


இரு முக்கியமான அமைச்சுப் பதவிகளை வகுக்கும் தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர் ஒருவருக்கு, மருத்துவ ஆலோசனை வழங்க பிரபல விஷேட வைத்திய நிபுணரும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியருமான ரணில் ஜயவர்தன மறுத்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை( 7) பதிவாகியுள்ளது.

கொழும்பின் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில், குறித்த வைத்திய நிபுணரிடம் ஊட்டச் சத்து தொடர்பிலான விடயம் ஒன்றுக்காகான சிகிச்சைகளுக்காக குறித்த அமைச்சர் சென்றுள்ளார்.

தைரோய்ட் நிலைமை காரணமாக இந்த அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையிலேயே, முன் கூட்டி செய்த பதிவுக்கு அமைய அவர் அவ்வைத்தியசாலைக்கு நேற்று (7) மதியம் சென்றுள்ளார்.

இதன்போது, அமைச்சர் தனக்கு ஒதுக்கப்பட்ட இலக்கம் நெருங்கியதும், அமைச்சரிடம் சென்றுள்ள தாதி ஒருவர், வைத்தியர் தனிப்பட்ட ரீதியில் அரசியல்வாதிகளுக்கு வைத்திய ஆலோசனை வழங்குவதிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பின்னர் வைத்தியரை சந்திக்கும் தனது நேரத்தில் வைத்தியரிடம் குறித்த அமைச்சர் சென்றுள்ள நிலையில், தான் அரசியல்வாதிகளுக்கு சிகிச்சையளிப்பதை தனிப்பட்ட ரீதியில் நிறுத்தியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
Previous Post Next Post


Put your ad code here