பிரதமரை சந்திக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி


 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை நடைபெறவுள்ளது.


இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பிரதமரின் அழைப்பின் பேரில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here