ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது..!!!




மொரட்டுவை, மொரட்டு வெல்ல பகுதியில் வன்முறைச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (15) காலை கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தேக நபர் தாக்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சந்தேக நபர் 49 வயதான மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here