Friday 13 May 2022

நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி..!!!

SHARE

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாள் நிகழ்வு நேற்று (12.05.2022) காலை நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபி முன்றலில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

எங்கள் கண்ணீருக்கு பதில் சொல் கடவுள் சும்மா இல்லை. அவன் இருக்கிறான் .எங்கட வயிறு பத்தி எரியிது. இண்டைக்கு கொழும்பு எரியிது. எங்கட பிள்ளைகளுக்கு பதிலைத் தா ??? என ஒப்பாரி வைத்து அழுத உறவுகள் முள்ளிவாய்க்கால் போரில் இந்த கஞ்சிக்கு கூட விழியில்லாமல் நாங்கள் இருந்தோம். என நினைவுகளைக் கூர்ந்து கஞ்சியின் முக்கியத்துவம் குறித்தும் வெளிப்படுத்தினார்கள்.

வீதிவழியே சென்ற மக்கள் இராணுவத்தினர் என்று பலருக்கும் கஞ்சி வழங்கப்பட்டதுடன்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் இனவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை குறித்த ஆவணப் புகைப்படக் கண்காட்சியும் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை குறித்த கண்காட்சி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி











SHARE