Sunday 1 May 2022

விக்னேஷ் சிவன் படத்தில் வில்லனாகும் விஜய்சேதுபதி?

SHARE

விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தை இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. நடிகர் அஜித்தின் 'விஸ்வாசம்', 'வீரம்', 'வலிமை' ஆகிய படங்களில் விக்னேஷ் சிவன் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அஜித்தை எப்போது இயக்குவீர்கள் என ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப அவரது இயக்கத்தில் அஜித்தின் 62வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அஜித் இப்போது ஹெச்.வினோத்துடன் 61வது படத்தில் பிஸியாக இருக்கிறார். இதை முடித்த பிறகே விக்னேஷ் சிவனுடனான கதை தொடங்கும்.

இந்த நிலையில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கான சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதியிடம் ''மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து விட்டீர்கள். அதே போல, அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, 'விக்னேஷ் சிவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். என் ஹீரோ சார் நீங்கள் என அடிக்கடி சொல்வார். அஜித்துக்கு வில்லனா என்ற கேள்வி அவரிடமும் கேட்கப்பட்டது. ஆனால், அவர் 'என்னுடைய ஹீரோவை எப்போதும் வில்லனாக பார்க்க விரும்பவில்லை' என கூறிவிட்டார். அதனால் நான் அஜித்தின் 62வது படத்தில் வில்லன் இல்லை' என பதில் அளித்துள்ளார் விஜய்சேதுபதி.

அஜித்தின் 62வது படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

SHARE