டீசல் இல்லாத காரணத்தினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இடைவழியில் நின்ற சம்பவம் கோயில்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பயணிகள் பேருந்தே எரிபொருள் இல்லாமல் கோயில்குளம் பகுதியில் நடுத்தெருவில் நின்றது.பின்னர் மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அவர்கள் அதில் பயணத்தை தொடர்ந்தனர்.
மாற்று பேருந்து வரும் வரையில் சுமார் ஒன்றரை மணி நேரம் வீதியில் அந்தரித்ததாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news