நாட்டின் பல பகுதிகளிலும் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம்..!!!




கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கொழும்பு கோட்டை நோக்கிய வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக   செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று முற்பகல், நாவின்ன சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியில் எரிவாயு கோரி ஆர்ப்பாட்ட ஒன்று இடம்பெற்றதால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஹோமாகம மற்றும் கொலன்னாவ பிரதேசங்களிலும் இன்று காலை ஒரு குழுவினர் எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும் 3,500 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் ஆனால் அதனை வெளியிடுவதற்கு டொலர் இல்லை எனவும் லிட்ரோ கேஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post


Put your ad code here