எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் மோசடியை குறைப்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மீனவர்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news
