இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்..!!!


பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

நேற்று  பிற்பகல் 1 மணியளவில் சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய, அதே வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த  பொலிஸ்  உத்தியோகத்தர் சந்தேக நபர் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளார்.

மற்றுமொரு  பொலிஸ்  உத்தியோகத்தர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைப் பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர் பொலிசாரை  தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக  பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில்  பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் வயிற்றிலும் மற்றையவர் கையிலும் காயமடைந்துள்ளதுடன், இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here