நாளை (05) நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.6 ஆம திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் புகையிரத தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, புகையிரத இயக்கப் பணிகள், தொழிற்பாடுகள், புகையிரத கட்டுப்பாட்டுப் பணிகள், புகையிரத நிலைய அதிபர்கள், புகையிரத இயந்திர சாரதிகள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் புகையிரத தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news