நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும், வன்முறைச் செயல்களில் ஈடுபடவும் மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
எனவே குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் குறித்த சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
ஏதேனும் கலவர சூழ்நிலையை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவுகளையும் அவர் வழங்கியுள்ளார்.
Tags:
sri lanka news