யானை தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழப்பு

 


மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை அடைச்சல்குளத்துக்கு அருகில் யானை தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.


புன்சேனை அடைச்சல் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் குணராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பலதினமான நேற்று மாலை 3.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து சுமார் ஒரு மையில் கல் தூரம் கொண்ட அடைச்சல் குளப்பகுதியில் மாடுகளை பார்ப்பதற்காக சென்ற நிலையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரின் உறவினர்கள் அவரை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்ற நிலையில் இரவு 11 மணிக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையடுத்து சடலமத்தை அங்கிருந்து பொலிஸார் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here