
புத்தளம், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தளுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் கற்பிட்டி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஹம்மட் அக்மல் படுகாயமடைந்துள்ள நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நேற்றிரவு குறித்த பிரதேச சபை உறுப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்றிரவே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மீண்டும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த நபர் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ள போதிலும், பிரதேச சபை உறுப்பினரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news