போராட்டம் காரணமாக தடைப்பட்டிருந்த மஹரகம நாவின்ன பகுதி தற்போது மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை கோரி சாரதிகள் சிலர் வீதியை மறித்து சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தது கலந்துரையாடியதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இன்று எரிபொருள் வருமா என உறுதியாக கூற முடியாது என தெரிவித்த பொலிஸார் வீதியை மறித்து போராட்டம் நடத்துவதில் ஏனையவர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக தெரிவித்திருந்தனர்
Tags:
sri lanka news