நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யாசிகா ஆனந்த் நடித்துள்ள கடமையை செய் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் எஸ்.ஜே.சூர்யா பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கடமையை செய் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் யாசிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சேஷு, வின்செட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
Tags:
cinema news