ஹரின் பெர்னாண்டோ எடுத்துள்ள திடீர் முடிவு

 


அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க மாட்டேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி நாம் நகரும் இன்றைய நாள் எமக்கு முக்கியமான நாளாகும்.

குறிப்பாக நாடு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வீழ்ச்சியடைந்துள்ள இவ்வேளையில், எமது நிலைப்பாடுகளையோ அல்லது கட்சிகளையோ விட்டுவிட்டு, குறிப்பாக இலங்கையின் எதிர்கால எதிர்கால தலைமுறைக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் இந்த அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்படவில்லை என்றால் இன்றிரவு இந்த அரசாங்கத்தில் இருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here