உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என எச்சரிக்கை..!!!

-

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

சிறுபோகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது நெற்செய்கையைச் செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here