யாழ்.நகர் மத்தியில் உள்ள கடையில் தீ..!!!


யாழ் நகரில் இருக்கும் பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை திடீரென தீப் பரவல் ஏற்பட்டது.

மின்சாரத் தடை நேரத்தில் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேல் தட்டில் வைத்து மின் பிறப்பாக்கி இயக்கிய சமயம் அதில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இவ்வாறு ஏற்பட்ட தீ பரவலையடுத்து அங்கே கூடியவர்கள், அருகில் உள்ள வர்த்தகர்கள் இணைந்து உடனடியாக தீயை அணைத்தமையினால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டது.



Previous Post Next Post


Put your ad code here