அச்சுவேலியில் பெண்களுக்கு முன்னுரிமை..!!!


நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக குறிப்பாக மோட்டார் சைக்கிளிற்கான பெற்றோலை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பல மணித்தியாலங்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில் மக்களுக்கு இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன் நேற்றையதினம் அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களின் வேலைப்பழுவினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் பெற்றோலை பெறுவதற்கு காத்திருந்த வேளை பெண்களை தனியாக வரிசைப்படுத்தி அவர்களுக்கான எரிபொருள் துரிதமாக வழங்கப்பட்டது.

இவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை எவரும் தவறுதலாக பயன்படுத்தி தமது தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முன்மாதிரியான செயற்பாட்டினால் எரிபொருளை பெற வந்த பலரும் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Previous Post Next Post


Put your ad code here