வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பும் தொகை 250 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பணம் அனுப்பும் தொகையை துரிதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கை தொழிலாளர்களுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வங்கிகள் ஊடாக இலங்கைக்கு டொலரை அனுப்பும் இலங்கைப் பணியாளர்கள் பல நன்மைகளை அனுபவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags:
sri lanka news