
மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த இரண்டு தடவைகளில் 13 அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், நியமிக்கப்படவுள்ள அமைச்சர்கள் தொடர்பில் இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Tags:
sri lanka news