இலங்கை பெண் அகதி வீட்டினுள் நுழைந்த பொலிஸ் அதிகாரி..!!!




இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் நுழைந்த பொலிஸ் அதிகாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு பைப்பர் படகில் அகதியாக வரும் இலங்கை தமிழர்கள் 80 பேரை பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மார்ச் 22 ஆம் திகதி மர்மப் படகில் வந்த ஒரு இளம்பெண் உட்பட 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். மெரைன் பொலிசார் விசாரணைக்கு பின், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கணவரை பிரிந்த அப்பெண் குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்பெண்ணிடம் பழகி வந்த மண்டபம் மெரைன் பொலிஸ் அதிகாரி அன்பு, கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு மது போதையில் வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அப்பெண் மறுத்ததையடுத்து அன்பு அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து அப்பெண் மற்றும் அப்போது முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவிடம், மெரைன் ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் பொலிசார் விசாரித்தனர். விசாரணை அறிக்கை படி மாவட்ட பொலிஸிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அன்புவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் உணவின்றி அகதியாக தமிழம் வந்த இலங்கை தமிழ் பெண்ணிடம் மெரைன் காவலர் மது போதையில் தவறாக நடக்க முயன்ற சம்பவம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here