
2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதி மற்றும் பரீட்சை அட்டவணைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
அனுமதிப் பத்திரங்கள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்ய மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
Tags:
sri lanka news