'தளபதி66' முதல் பார்வை வெளியீடு..!!!


நடிகர் விஜய்யின் 66வது படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'மாஸ்டர்', 'பீஸ்ட்' படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் தன்னுடைய 66ஆவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். 'தோழா' படத்தை இயக்கிய வம்சி இந்த படத்தை இயக்குகிறார். தில் ராஜூ படத்தைத் தயாரிக்கிறார்.

முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தானா விஜய்யுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகிறது.

சென்னையில் ஒரு பாடல் எடுத்து முடித்த பின்பு இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்து தற்பொழுது மீண்டும் சென்னையில் நடந்து வருகிறது.

நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் சென்னை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியானதால், சென்னையிலேயே வேறு இடத்தில் செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை (ஜூன் 22) நடிகர் விஜய்யின் 48ஆவது பிறந்தநாள். இதனையொட்டி இந்த படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்படுவதாகப் படக்குழு அறிவித்தது. இது மட்டுமல்லாமல், இன்று இரவு 12 மணிக்கு இரண்டாவது பார்வையும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி விஜய்யின் 66வது படம் 'வாரிசு' என தலைப்பிடப்பட்டுள்ளது. முதல் பார்வையில் நடிகர் விஜய் கோட்-சூட் அணிந்து இருக்கிறார். படத் தலைப்பின் கீழ் 'The Boss Returns' என டேக் லைனும் கொடுக்கப்பட்டுள்ளது.

 
Previous Post Next Post


Put your ad code here