பிரசவ வலி ஏற்படும் வரை வீடுகளில் காத்திருக்க வேண்டாமென வைத்தியர்கள் கோரிக்கை..!!!



நாட்டின் தற்போதைய நிலையில் கர்ப்பிணித் தாய்மார் பிரசவத்திற்கான வலி ஏற்படும் வரை வீடுகளில் காத்திருக்க வேண்டாம் என மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாதாரண பிரசவ முறையில் முதலாவது குழந்தையை பிரசவித்த தாய்மார், இரண்டாவது குழந்தையை பிரசவிப்பதற்கான காலம் குறைவடையக்கூடும் என மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர் வித்ய விபூசன தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித்தாய்மாருக்கு பிரசவத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

இதன்மூலம் வீடுகளில் மற்றும் வெளி இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை பிரசவிப்பதனை தவிர்க்க முடியும்.

இதனால் தாய் மற்றும் சேய் ஆகியோரை பாதுகாக்க முடியும் என பிரசவ மற்றும் நரம்பியல் விசேட வைத்தியர் வித்ய விபூசன குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் இன்மையினால், வைத்தியசாலைக்கு செல்ல தாமதமான கர்ப்பிணித்தாய் ஒருவர் தமது 3 வது குழந்தையை வீட்டில் பிரசவித்த சம்பவம் நிக்கவரட்டிய பகுதியில் நேற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here