யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத இரு ஆண்களின் சடலங்களையும் அடையாளம் கண்டு பொறுப்பேற்கும்படி யாழ் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி உறவினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
கடந்த 29.05.22. அன்று பெயர் முகவரியின்றிய நிலையில் சிகிச்சை பெற்ற ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி 06.06.2022 அன்று இறந்துள்ள நிலையிலும் ,
22.06.2022 அன்று யாழ். கோட்டை அகழியில் கண்டெடுக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலமும் யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே இரு சடலங்களையும் மிக விரைவில் அடையாளம் கண்டு பொறுப்பேற்று உதவுமாறு உறவினர்களிடம் கோரிக்கைவிடப்பட்டுள்ளது என்றுள்ளது.
யாழ்.தர்மினி
%20(1).webp)