அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள்

 


அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளை தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸார் கைது செய்தனர்.


சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கொத்தலாவல நுழைவாயிலில் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து பொலிஸாரின் உத்தரவை மீறி கொட்டாவ நோக்கி பயணித்து கடவத்தை நோக்கி திரும்பும் போது காருடன் மோதியுள்ளார்.

சந்தேக நபர் அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீற்றர் தூரம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தன.

கைது செய்யப்பட்ட பெமுல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கான்ஸ்டபிள் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here