
பல்நெடு வரலாற்றைத் தன்னகத்தே சுமந்த பாரம்பரியம் மிக்கதும், தமிழ் மன்னர்களால் போற்றி வழிபடப்பட்டதுமான வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (19.5.2022) காலை-9 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் 25 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாகச் சிறப்பாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் அடுத்தமாதம்-6 ஆம் திகதி புதன்கிழமை மஞ்சத் திருவிழாவும், 9 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கைலாசவாகன உற்சவமும், 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை வேட்டைத் திருவிழாவும், மாலை குதிரை வாகனத் திருவிழாவும், 11 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-6 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து தேர்த் திருவிழாவும், 13 ஆம் திகதி புதன்கிழமை காலை-9 மணிக்கு காளிகா தீர்த்த புஷ்கரணியில் தீர்த்த உற்சவமும், அன்றையதினம் மாலை-6.45 மணிக்கு கொடியிறக்க உற்சமும் நடைபெறும் என மேற்படி ஆலய தர்மகர்த்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவின் 25 தினங்களும் மேற்படி ஆலயத் தொண்டர் சபையினரால் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
படங்கள்: ஐ.சிவசாந்தன்





