இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை - அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவிப்பு..!!!


இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 அவுஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பல்தேசிய வங்கிகளில் ஒன்றான இந்த கொமன்வெல்த் வங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் கொமன்வெல்த் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு நபரேனும் எமது வங்கியின் ஊடாக இலங்கையிலுள்ள தமது நண்பருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ பணம் அனுப்பும் பட்சத்தில், அப்பணவனுப்பலுக்கான கட்டணத்தில் 6 அவுஸ்திரேலிய டொலர்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தச் சலுகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here