யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களால், மாணவர்களை துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு வரத் தூண்டுவதற்கான விழிப்புணர்வுப் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றது.
துவிச்சக்கர வண்டியில் மாணவர்கள் பவனியாக யாழ். இந்துக்கல்லூரியில் இருந்து KKS வீதியினூடாக பண்ணையை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து கோட்டை, மணிக்கூட்டு கோபுரம், வேம்படி மகளிர் கல்லூரி, நாவலர் வீதி ஊடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்.
பவனியின் முடிவில் வைத்திய நிபுணர் காண்டீபன் (பழைய மாணவன்) அவர்களின் கருத்துரை சபாலிங்கம் அரங்கில் இடம்பெற்றது.