கொழும்பு வந்த லண்டன் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு - ஹீரோவாக செயற்பட்ட விமானி தொடர்பான தகவல்..!!!


துருக்கி, அன்காரா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட பிழையை சரி செய்து விமான விபத்தை தவிர்த்த இலங்கை விமானி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13ம் திகதி லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL 504 விமானம் 35000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்படவிருந்தது.

35000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது மற்றுமொரு விமானம் அதே வழியில் பயணிக்கவில்லை என துருக்கி விமான கட்டுப்பாட்டு அறை பிழையாக தெரிவித்துள்ளது. எனினும் அதனை சரியாக அவதானித்த இலங்கை விமான மற்றுமொரு விமானம் இருப்பதனை அவதானித்துள்ளார்.
 
அதற்கமைய தனது விமானத்தை பாதுகாப்பாக திசை திருப்பி பாரிய விபத்தை தவிர்த்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானியான நவீன் டி சில்வாவின் சாதுர்யத்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான சேவையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் இருந்து கொழும்புக்கு பறந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம், இலங்கை விமானியால் ஆபத்தின்றி தரையிறங்கியதை உறுதிப்படுத்துகின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, UL 504 விமானம் மற்றொரு விமானத்துடன் மோதும் அபாயத்திற்குள்ளாகியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் எங்கள் விமானிகளின் புத்திசாலித்தனமும், அதிநவீன தகவல் தொடர்பு அமைப்பும் விமானத்தை பாதுகாப்பாக பறக்க உதவியது.

விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பதன் மூலம் விபத்தைத் தடுக்க முடிந்தது. UL 504 விமானத்தின் விமானிகளுக்கு எங்கள் பாராட்டுக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here