மின் கட்டண அதிகரிப்பு குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மின் பயன்பாட்டில் 30-60 வரையான அலகுகளை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதே நேரம் ஏற்றுமதி மற்றும் ஏனைய விடயங்கள் மூலம் அந்நிய செலாவணியை உழைக்கும் நிறுவனங்களிடமிருந்து டொலரில் மின் கட்டணத்தை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news