மதுபான போத்தலை இடுப்பில் செருகிக் கொண்டு வந்தவர், நிலத்தில் விழுந்ததால், போத்தல் உடைந்து, உடலில் கடும் காயமேற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஏ – 9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் கிறிஸ்ரோப்பர் இருதயராஜ் (வயது – 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் குருதிப் பெருக்குடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர், 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கினார். அவரை மீட்டு கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் உயிரிழந்துள்ளார். போத்தலால் குத்தப்பட்டு அதிக அளவு குருதி பெருக்கெடுத்து காணப்பட்டது.
சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. மதுபான கடைக்கு வந்த நபர், போத்தல் ஒன்றை வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டு வெளியேறியுள்ளார். தள்ளாடியபடி சென்று நிலத்தில் விழுந்த போது, போத்தல் உடைந்து, உடலில் குத்தியுள்ளது.இதனாலேயே அதிகமான குருதிப்ப்போக்கால் அவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news