ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஓட்டமாவடி மற்றும் மாவடிச்சேனை பிரதேசத்தை 44, 41 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 30 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அவர்களின் வீடுகளில் வைத்து விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டனர்.
மேலதிக நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news
