Thursday 7 July 2022

இன்றைய ராசிபலன் - 07.07.2022 ..!!!

SHARE


மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்கள் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டது அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்கள் உதவி யை நாடுவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மாற்றாக வாங்கி இருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப் பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தி யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசாரித்துப்போங்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் தழைக்கும்.புது ஒப்பந்தம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

தனுசு

தனுசு: எதையும் தாங்கும் மனோபலமும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்பு கூடும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை, அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து சொல்லும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எச்சரிக்கை உணர்வு தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வாசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
SHARE