அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம்திகதி திங்கட்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும் என்றும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறல்லாவிடின் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news