
|
நேற்றிரவு 9 மணி வரை தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
299 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR அமைப்புகள் மூலம் எரிபொருளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி நேற்றைய தினம் QR முறைமைகள் ஊடாக 92,845 பரிவர்த்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
sri lanka news