பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பிரதான சந்தேக நபர் பலி..!!!




புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அண்மையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் இன்று (04) அதிகாலை 4 மணியளவில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரைக் கைது செய்யச் சென்றபோது, ​​அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதுடன், பொலிஸார் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்றுள்ளனர்.

பின்னர், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இகல விதானகே ஜோசப் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி, புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இரு இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் இவராவார்.
Previous Post Next Post


Put your ad code here