எண்ணெய் பரிமாற்றத் திட்டம் குறித்து கலந்துரையாடல்

 


வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) தெரிவித்தார்.


கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போதே தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு இணையாக எண்ணெய் பரிமாற்றத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இறுதிக்கட்டத்தில் உள்ள 120 மெகாவோட் திறன் கொண்ட உமாஓயா திட்டத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வழங்கும் ஆதரவிற்கு தமது நன்றியைத் தெரிவித்தார்
Previous Post Next Post


Put your ad code here