
பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (01) மாலை வேலையில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த 17ம் இலக்க வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற வேலையில் மரத்தில் இருந்த குளவி கூட்டினை கழுகு வந்து மோதியமையினால் குளவி கலைந்து வந்து தாக்கியுள்ளதோடு அதில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்ததாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் பொகவந்தலாவ கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் என்பவரே உயரிழதுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு காயங்களுக்கு உள்ளான மற்றைய மூன்று பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news