Monday 4 July 2022

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய  சிறுவன் உயிரிழப்பு - காங்கேசன்துறையில் சம்பவம்..!!! 

SHARE

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் ( வயது -10 ) என்பவரே உயிரிழந்தார் .

நேற்று பிற்பகல் 2 மணியளவில் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது , தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .

எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது . வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெபாலசிங்கம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார் .

சிறுவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
SHARE