Thursday 7 July 2022

ஹாட்லி மாணவனின் ஹைபிரிட் சைக்கிள்..!!!

SHARE

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் ஸ்ரீமன், சாதாரண துவிச்சக்கர வண்டியை மின்கலத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டியாக மாற்றியுள்ளார். இந்தத் துவிச்சக்கர வண்டி ஹாட்லிக் கல்லூரியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது .

ஹாட்லிக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி அறிமுக விழாவில் முதன்மை விருந்தினராக பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் கலந்து கொண் டார் .

நிகழ்வில் பாடசாலை உப அதிபர், ஆசிரியர்கள் , நலன்விரும்பிகள் , பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .





SHARE