யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளராக, மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்றையதினம் மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஒன்றரை வருடங்கள் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்த சத்தியமூர்த்தி, தனது கல்வியை முடித்துக் கொண்டு மீண்டும் பணிப்பாளராக நேற்றையதினம் கடமைகளைப் பொறுப்பேற்றார் .