திருக்கேதீஸ்வர ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா..!!!(Video)


பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று புதன்கிழமை (6) காலை 9 மணிக்கு இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30ம் திகதி பூர்வாங்க கிரிகைகள் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (5) மதியம் 12 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதனையடுத்து சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும் நடைபெற்றது. இன்று புதன்கிழமை (6) காலை 9 மணி அளவில் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. இதன் போது குருக்கள் மற்றும் மக்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் குறித்த கும்பாபிஷேக பெருவிழா வில் கலந்து கொண்டிருந்தனர்.



Previous Post Next Post


Put your ad code here