மொட்டு அரசாங்கமே பொறுப்பு..!!!




எதிர்க்கட்சி என்ற ரீதியில் சர்வ கட்சி அமைச்சு சூதாட்டத்தின் ஊடாக ராஜபக்ஸவினரின் குப்பைகளை சுமக்க விரும்பவில்லை எனவும் பாராளுமன்ற குழு முறைமையின் ஊடாக ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான மொட்டு அரசாங்கமே பொறுப்பு என்றும், அவருக்கு அதிகாரத்தை வழங்கிய எம்.பி.க்களும் இந்நிலைமைக்கு காரணம் என்றும், இந்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி உட்பட 225 பேரும் பல அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என்றும் தற்போது அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டிய காலமே உதயமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் நாகத்தைக் காட்டியும், முட்டி உடைத்தும், பாணியை காட்டியும் மக்களை ஏமாற்றியதாகவும் இனிமேலும் ஏமாற்றாமல் புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த வரிசையில் நிற்கும் யுகத்தினால் சகலரும் அவதியுறுவதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர், இதற்கு தீர்வை வழங்குமாறு மக்கள் கோரிய போதும் மொட்டு அரசாங்கம் அதற்கு நிலையான தீர்வை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளாமல், சலுகைகளைப் பார்க்காமல் அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் பெரிய பதவிகளில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் கூட தமது குடும்ப உறுப்பினர்களை தமது பணியாளர்களாக இணைத்துக் கொண்டுள்ளதாகவும் சர்வ கட்சி ஆட்சியில் அந்நிலைமை நீங்க வேண்டும் எனவும் இந்நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப உழைக்க வேண்டும் எனவும் இதன்போது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும், எதிர்காலத்தில் அமைச்சர்களின் நலனுக்காக மக்கள் நிதியை பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.


இந்நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றிய யு.எல்.எம்.பாரூக் அவர்களின் முதலாவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (06) ருவன்வெல்லயில் இடம் பெற்றது.

யு.எல்.எம்.பாரூக்,அப்போதைய ருவன்வெல்ல தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆர்.பிரேமதாஸவின் ஆட்சியில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற சிறந்த தலைவராகும். அவரது புதல்வர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஹால் பாரூக் அவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றது.


Previous Post Next Post


Put your ad code here