
இரண்டு கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் நபரொருவர் ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் முச்சக்கரவண்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்த இரண்டு கண்ணீர்ப்புகை குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்று காலை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய அருனோதய மாவத்தை, ஒபேசேகரபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபப்படவுள்ள நிலையில் வெலிகடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news