விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.


இன்று (19) காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தை மீட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here